• Breaking News

    பாகுபலி ராணாவின் காதலி

    பாகுபலியாக அனைவரையும் கவர்ந்த தெலுங்கு நடிகர் ராணா, தனது காதலியை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்துயுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த உள்துறை வடிவமைப்பாளர் (Interior designer) மிஹீகா பஜாஜ்தான் (Miheeka Bajaj) அந்த அதிஷ்டக்காரப் பெண். 





    ராணாவின் தந்தை சுரேஷ் பாபுவின் கூற்றுப்படி, இந்த ஜோடி வரும் டிசம்பரில் திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அண்மையில் ஒரு நேர்காணலில், அவர் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக திருமணத்தை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.


    ராணா தனது தனிப்பட்ட வாழ்க்கையை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. எனவே இந்த ஜோடியின் காதல் கதையைப் பற்றி அதிகம் தகவல் வெளியாகவில்லை. மிஹீகா ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். செல்சியா பல்கலைக்கழகத்தில் (Chelsea University), உள்துறை வடிவமைப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோ (Dew Drop Design Studio) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மிஹீகாவின் தாயார் பண்ட்டி பஜாஜ் (Bunty Bajaj), க்ர்சலா (Krsala jewels) என்ற ஒரு பிரபல ஆபரண நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad