• Breaking News

    . பந்தை முத்தமிடக்கூடாது தென்அமெரிக்க கூட்டமைப்பு அறிவிப்பு


    கொரோனா வைரஸ் தாக்கம் தணிந்து உதைப்ந்தாட்டப்  போட்டிகளை மீண்டும் தொடங்கும் போது எல்லோருடைய சுகாதாரத்தையும் பாதுகாக்கும் பொருட்டு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தங்கள் உறுப்பு நாடுகளுக்கும்   கிளப்புகளுக்கும்  தென்அமெரிக்க உதைபந்தாட்டக்  கூட்டமைப்பு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில் வீரர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி இனி வருங்காலங்களில் உதைபந்தாட்டப்  போட்டிக்கு முன்போ, பின்போ அல்லது போட்டியின் போதோ வீரர்கள் பந்துக்கு முத்தமிட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் வீரர்கள் எதிரணியினருடன் பனியனை மாற்றிக்கொள்ளும் நடைமுறைக்கு தடை போடப்பட்டு இருக்கிறது. போட்டி தொடங்கும் முன்பு இரு அணிகளின் கப்டன்களும் தங்கள் அணியின் கொடியை மாற்றும் பழக்கத்துக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

    மைதானங்களில் எச்சில் துப்பவும், மூக்கில் இருந்து வெளியேறும் சளியை சீந்தவும் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், அதிகாரிகள் உள்பட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் இந்த பரிசோதனைக்கு உட்பட மறுப்பவர்கள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் கிளப்புகளுக்கு அபராதம் விதிக்கப்படும். போட்டிக்கு முன்பாக அனைவரது உடல் வெப்பநிலையும் பரிசோதனை செய்யப்படும். வெளியில் (பெஞ்சில்) இருக்கும் மாற்று வீரர்கள் உள்பட அனைவரும் எல்லா நேரமும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad