இரண்டாவது டோஸை பெறச் சென்ற பெண்ணுக்கு ஒரே நேரத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி ஏற்றிய சம்பவம்!
சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெறச் சென்ற ஒரு பெண்ணுக்கு ஒரே நேரத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்திற்குப் பிறகு தனக்கு பல்வேறு உபாதைகள் இருப்பதாக அந்தப் பெண் கூறினார். இதில் 46 வயதான ரசிகா பிரியதர்ஷனி என்ற பெண்ணே பாதிக்கப்பட்டுள்ளார்.
மாகும்புர - பன்னிபிட்டியவில் உள்ள விஜயகோஷ கல்லூரியில் கடந்த 16ஆம் திகதி மகரகம சுகாதார அலுவலகத்தின் பிரிவுக்குட்பட்ட தடுப்பூசி மையத்தில் இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொள்ள குறித்த பெண் சென்றிருந்தார்.
இதில் தனக்கு இரண்டு முறை தவறுதலாக ஊசி போடப்பட்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடாபில் பாதிக்கப்பட்ட பெண் கருத்த தெரிவிக்கையில்,
“நான் வீட்டிற்கு வந்த நேரத்தில் இருந்து என்னால் சரியாக இருக்க முடியவில்லை. உடல் முழுதும் ஒரு வகையான வேதனை உள்ளது.
மூன்று அல்லது நான்கு நாட்களாகவே என் கை, கால் உணர்ச்சியற்று இருக்கின்றது. என்னால் நிற்க முடியவில்லை, என்னால் எழுந்து நிற்க முடியவில்லை, சுமார் 4 நாட்கள் தொடர்ந்து தூங்கினேன். குறைந்தது 5 நிமிடங்களுக்கு எதையும் வைத்திருக்க முடியாது.” என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பில் சுகாதார துணை இயக்குநர் ஜெனரல், நிபுணர் டாக்டர் ஹேமந்த ஹேரத் கருத்து தெரிவிக்கையில்,
“நாங்கள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திடம் விசாரித்தபோது, சினோபார்ம் தடுப்பூசி அதிக அளவில் உடலில் இருந்தால் ஏதேனும் சிக்கல்களை ஏற்படுத்தும் சாத்தியம் இல்லை” என்று அறிவிக்கப்பட்டதாக கூறினார்.
கருத்துகள் இல்லை