ரிசாட்டின் உச்ச நீதிமன்ற விசாரணையிலிருந்து மற்றுமொரு நீதியரசர் திடீர் விலகல்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிசாட் பதியூதீனினால் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணையிலிருந்து மற்றுமொரு நீதியரசர் விலகிக் கொண்டுள்ளார்.
இதுவரையில் இவ்வாறு நான்கு நீதியரசர்கள் விலகிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் ரிசாட் பதியூதீன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இந்த அடிப்படை உரிமை மீறல் மனு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்றைய தினம் மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் நான்காவது தடவையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே நீதியரசர்களான ஜனக் டி சில்வா, யசந்த கோதாகொட மற்றும் ஏ.எச்.எம். நவாஸ் ஆகியோர் இந்த மனுவினை விசாரணை செய்வதிலிருந்து விலகிக் கொண்டிருந்தனர்.
இந்த மனு எதிர்வரும் 8ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை