• Breaking News

    இலங்கை மீனவரின் சடலம் இந்தியாவில் கரை ஒதுங்கியது

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடற்றொழிலுக்கு சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்த யாழ்.ஊர்காவற்றுறையை சேர்ந்த மீனவர் தமிழகம் கோடியாக்கரையில் சடலமாக இன்றைய தினம் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளார். 

    ஊர்காவற்றுறையை சேர்ந்த சில்வஸ்டார் மரியதாஸ் என்ற மீனவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவிலிருந்து கடற்றொழிலுக்கு சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்தார். இந்நிலையில் காணாமல் போன மீனவரை குறித்த கடற்பரப்பில் கடற்படையினருடன் இணைந்து மீனவர்கள் தேடிய நிலையில் கண்டுபிடிக்க முடியாமல் போனது.

    இந் நிலையில் தமிழகம் கோடியாக்கரையில் சடலம் ஒன்று மிதந்து வருவதை அவதானித்த மீனவர்கள் இந்தியக் கடலோர காவல் படையினருக்கு தகவல் வழங்கினர்.சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதால் அவர் அணிந்திருந்த கீழ் ஆடையில் இலங்கை இலச்சினை பொறிக்கப்பட்டமை அவதானத்துடன் அவர் இலங்கை மீனவர் என அடையாளம் காணப்பட்டார்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad