இராணுவத்தால் அமைக்கப்பட்ட இரு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
இராணுவத்தினரால், சுழிபுரம் மற்றும் துணைவி பகுதிகளில் அமைக்கப்பட்ட வீடுகள் இன்று திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
வீடுகளை யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் பிரியந்த பெரேரா திறந்து வைத்துள்ளார்.
சுழிபுரத்தில் அமைக்கப்பட்ட வீடானது, வீடமைப்பு அதிகார சபையின் நிதி உதவியுடனும் இராணுவத்தினரின் சரீர பங்களிப்புடனும் மற்றும் துணைவியில் அமைக்கப்பட்ட வீடு சமூக ஆர்வலர் குமார வீரசூரியவினதும், அவரது நண்பர்களது நிதி உதவியுடனும் இராணுவத்தினரின் சரீர பங்களிப்புடனும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது வீட்டுப் பாவனைக்குத் தேவையான தளபாடங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை