• Breaking News

    எங்களை யாரும் அடிமையாக்க முடியாது! உலக நாடுகளுக்கு சீனா இறுமாப்பு

    சீனாவின் சகாப்தம் தொடங்கிவிட்டது என்றும் தம்மை அடிமைப்படுத்த நினைத்தால் இரத்தக்களரியை சந்திக்கவேண்டி வரும் எனவும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மிக வலிமையான உரையை தன் நாட்டு மக்கள் முன்னிலையில் நிகழ்த்தி இருக்கிறார்.

    அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு தனது உரையின் மூலம் நேரடி சவாலை அவர் விடுத்துள்ளார்.

    சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி 1000 ஆண்டுகள் முடிந்ததை அடுத்து அந்த நாடு நேற்று விழாக்கோலம் பூண்டது.

    இந்த நிலையில் சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தியான்மென் சதுக்கத்தில் மாவோவின் பிரமாண்ட புகைப்படம் முன் நின்று உரை நிகழ்த்தி, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    சீனா பல சவால்களை கடந்து உலகின் வலுவான நாடாக உருவெடுத்து இருக்கிறது. மிகப்பெரிய அடிமை நாடாக இருந்த நாம் சங்கிலியை உடைத்து உலகின் மிகப்பெரிய நாடாக உருவெடுத்து இருக்கிறோம். இது சீனாவின் காலம். சீனாவின் சகாப்தம் தொடங்கி விட்டது. சீனாவை ஆட்டிப்படைக்கலாம், கொடுமைப் படுத்தலாம், சீனாவை கட்டுப்படுத்தலாம் என்று நினைத்ததவர்களின் காலம் முடிந்துவிட்டது. அவர்களின் காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

    சீனாவில் ஒவ்வொரு மக்களும் வளத்துடனும், செல்வ செழிப்புடனும் முன்னேறி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. வறுமையில் இருந்த பல கோடி மக்கள், வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளனர். சீனாவின் வளர்ச்சி உலகத்தையே மாற்றி உள்ளது. உலக நாடுகளை சீனா திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    சீனாவின் கட்டமைப்பு உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது. பல போர்களை, வறுமையை, வெளிநாட்டு சதிகளை நாம் கடந்து வந்து இருக்கிறோம். சீன மக்கள் என்றும் வெளிநாட்டு சக்திகளை நாட்டிற்குள் விட மாட்டார்கள். எங்களை அடிமைப்படுத்தவும், எங்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும், எங்களை தாக்கவும் நாங்கள் என்றும் அனுமதிக்க மாட்டோம்.

    சீனாவின் இரும்பு சுவர்களை தாக்க வேண்டும் என்றால் 1.4 பில்லியன் மக்களை நீங்கள் தாண்டி வர வேண்டும், எங்களை அடிமைப்படுத்த நினைத்தால் நீங்கள் பெரிய இரத்தக்களரியை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad