70 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சிஜாம் (35). ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிகிறார். இவர் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகின.
முகமது சிஜாம் டிப்-டாப் ஆக உடை அணிந்து மிகவும் வசீகரமாக இருப்பார். அதை பயன்படுத்தி கிராமத்து இளம்பெண்களை திருமணம் செய்துள்ளார். தான் ரெயில்வேயில் வேலை பார்ப்பதால் கை நிறைய சம்பளம் கிடைக்கும். அதன் மூலம் உல்லாச வாழ்க்கை வாழலாம் என ஆசைவார்த்தை கூறி திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பபார்.
நிறைய வரதட்சணை மற்றும் சீர் வரிசைகளுடன் திருமணம் முடிந்ததும் அவர்களுடன் சிறிது நாட்கள் குடும்பம் நடத்துவார். பின்னர் அவர்களை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை அபகரித்துக் கொள்வார்.
அதன் பிறகு, தனக்கு வேறு ஊருக்கு வேலை மாற்றலாகி விட்டது. எனவே சிறிது நாட்கள் கழித்து அழைத்து செல்கிறேன் என கூறி அப்பெண்களை நிர்கதியாக விட்டு விட்டு அங்கிருந்து தப்பி விடுவார். இதுபோன்று தான் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.
இவர் பீகாரில் உள்ள மேற்கு சாம்பரான், சிதாமர்கி, முசாபர் பூர், பகல்பூர், பகுசாரை, பூர்ணியா, மாதேபுரா, கிடின் கஞ்ச் பகுதியிலும், மேற்குவங்காளத்தில் மிட்னாபூர், அசன்கால், மால்டா, சீல்டா மற்றும் அவுரா பகுதிகளிலும் பெண்களை திருமணம் செய்துள்ளார்.
இவர் திருமணம் செய்யும்போது இந்து பெண்களை திருமணம் செய்ய இந்துவாகவும், முஸ்லிம் பெண்களை திருமணம் செய்ய முஸ்லிம் ஆகவும் மாறி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கருத்துகள் இல்லை