• Breaking News

    மீண்டும் வரும் பிரஷாந்த்தோடு தமன்னா..... ?

    பல மெகாஹிட் திரைப்படங்களில் வெற்றி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் பிரஷாந்த்.  விஜய், அஜித் எல்லாம் வர முதலே உலகம் முழுவதும் ரசிகர் மன்றங்களோடு, குறிப்பாக ரசிகையர் மன்றங்களோடு கலக்கியவர் Top Star பிரஷாந்த். 



    இவரை பிடிக்காது என்று சொல்லியவர்கள் யாருமே இருக்க முடியாது, எந்த சர்ச்சைகளுக்குள்ளும் சிக்காத பிரஷாந்த் கிரகலட்சுமியை திருமணம் செய்து பின்னர் அது பிரச்சினையில் முடிய, விவாகரத்தைப் பெற்று சினிமா வாழ்வில் இருந்தே ஒதுங்கி இருந்தார். 

    இவருடைய இரசிகர்கள் திரையில் பிரஷாந்தைக் காணாமல் தவித்தார்கள். எப்போது மீண்டும் இந்த செந்தமிழ் செல்வன் வருவார் என்று காத்திருந்தார்கள். 

    சத்தமில்லாமல் மீண்டும் இளமையான ஹீரோவாக புதுப் பொலிவோடு களம் இறங்கியுள்ளார் பிரஷாந்த். சாகசம் திரைப்படத்தில் நாயகி இல்லாமலே நடித்துக் கொண்டிருந்தார்.  இப்பொழுது படக் குழுவின் நாயகி வேட்டையில் சிக்கியிருக்கிறார் அழகுப் ப(பு)துமை தமன்னா. 

    இப்படத்தை பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்க, பிரஷாந்தோடு ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் ஹிந்தியின் அண்மைக்கால பரபரப்பு நடிகை நர்கீஸ் பக்ரி(Nargis Fakhri ). உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad