சன்னி லியோனுடன் ஜெய் தொடர்பு
சன்னி லியோனுடன் தொடர்பில் இருக்கிறார் ஜெய்.பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் முதன் முறையாக தமிழில் ‘வடகறி என்ற படத்தில் ஹீரோ ஜெய்யுடன் குத்தாட்டம் ஆடி இருக்கிறார். சமீபத்தில் கோடம்பாக்கம் வந்த சன்னி லியோன் பாடலுக்கு ஆடிவிட்டு சென்றார். சன்னியுடன் நெருக்கமாக ஆட்டம் போட்ட ஜெய், அவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டதுடன் அவரது நடனத்தை பாராட்டி தள்ளினார்.
பிறகு மும்பை புறப்பட்டு சென்ற சன்னி சமீபத்தில் தனது பிறந்த தினத்தை கொண்டாடினார். அவரது பிறந்த நாளை ஞாபகம் வைத்து கொண்டு மறக்காமல் போன் செய்து வாழ்த்து தெரிவித்தார் ஜெய். அதற்கு பதில் அளித்த சன்னி, ‘உங்களுடன் இணைந்து நடனம் ஆடிய பாடல் என் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது. அதன் வரிகளை தினமும் நான் முணுமுணுத்து கொண்டிருக்கிறேன். பாடல் எப்படி வந்திருக்கிறது என்பதை பார்க்கவும் ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை