• Breaking News

    இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை வெற்றி: பட்லரின் அவுட் சர்ச்சை

    இலங்கை அணிகள் மோதிய 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 48.1 ஓவரில் 219 ரன்னில் சுருண்டது. கேப்டன் கூக் 56 ரன் எடுத்தார். மலிங்கா 3 விக்கெட்டும், மெண்டீஸ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.


    பின்னர் விளையாடிய இலங்கை 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3–2 என்ற கணக்கில் தொடரை வென்றது. திரிமானே 60 ரன்னும், ஜெயவர்த்தனே 53 ரன்னும் எடுத்தனர்.

    இந்தப்போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜான் பட்லரின் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. கிரீசை விட்டு வெளியே வந்து நின்ற அவரை பந்துவீசி கொண்டிருந்த செனனாயகே பந்தால் ஸ்டம்பை தட்டி அவுட் செய்தார். செனனாயகேவின் பந்துவீச்சு குறித்து ஏற்கனவே சந்தேகம் கிளப்பப்பட்டது. தற்போது பட்லரை அவுட் செய்தவிதம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இரண்டு முறை பட்லர் எச்சரிக்கை செய்யப்பட்ட பிறகே இது மாதிரி அவுட் செய்யப்பட்டார் என்று இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே அதை நியாயப்படுத்தினார். ஆனால் இதை இங்கிலாந்து கேப்டன் கூக் ஏற்றுக்கொள்ளவில்லை.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad