கன்னித்திரையின் பங்கு என்ன ?
இது ஒரு தற்காலிகத் தடுப்புச் சுவர்தான். அறியாத பருவத்தில் தெரிந்தோ தெரியாமலோ அந்நியப்பொருள்கள், பருவம் அடைவதற்கு முன்பு, உடலுறவுப்பாதையில் சென்று விடக்கூடாது என்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. இந்த மெல்லிய ஜவ்வில் உள்ள சிறு சிறு துவாரங்கள் வழியாக மாதவிடாய் வெளியேறும்.
இப்போதுள்ள பெரும்பாலான பெண்கள் தேகப்பயிற்சி, நாட்டியம், சைக்கிள் ஓட்டுதல், விளையாட்டு போன்றவற்றில் அதிகமாக ஈடுபடுவதால், இது உடலுறவுக்கு முன்பே கிழிந்துவிடுகிறது. ஆகவே ஒரு பெண்ணின் கன்னித்தன்மை(Virginity) கன்னித்தோலால் நிர்ணயிக்கப்படுவது தவறானது.
கருத்துகள் இல்லை