ஆப்பிளின் iOS - 8 குறித்த அறிவிப்பு வந்தாச்சு....!
நேற்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஆப்பிளின் WWDC (WorldWide Develpers Conference) தொடங்கியுள்ளது இதில் ஆப்பிள் தனது எதிர்கால திட்டங்கள் மற்றும் எதிர்கால ஆப்பிள் ப்ராடக்டுகளை அறிவித்தது. அதில் மிகவும் முக்கியமான ஒன்று ஐ.ஓ.எஸ்8(ios 8) பற்றி அறிவித்ததாகும் விரைவில் இந்த ஐ.ஓ.எஸ்8 யை ஆப்பிள் அதன் ஐ போன் மற்றும் ஐ பேடுகளுக்கான அப்டேட்டை வெளியிட இருப்பதாக ஆப்பிளின் தலைமை அதிகாரி டிம் குக்(Tim Cook) தெரிவித்தார். மேலும் இந்த கான்பரன்சிஸ் ஆப்பிள் வெளியிட இருக்கும் பல திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது இதோ அவற்றை இங்கு காணலாம்....
இந்த கான்பிரன்ஸில் முக்கியமாக அறிவிக்கப்பட்ட திட்டம் ஆப்பிளின் ஐ பேட் மற்றும் ஐ போன்களுக்கு ஐ.ஓ.எஸ் 8 பற்றி விரைவில்அப்கிரேட் கொடுப்பதுதான். ஆப்பிளின் டெக்ஸ்க்டாப் கம்பியூட்டர்களுக்கு அடுத்து 10.10 Yosemite ஓ.எஸ் அப்டேட் வர இருக்கின்றது
ஐ.ஓ.எஸ் 8 உடன் இலவசமாக நமது உடல்நலனை பாதுகாக்கும் ஹெல்த்கிட் ஆப்ஸை இலவசமாக தர இருக்கின்றது ஆப்பிள்.
ஐ போன் 6
மேலும் ஐ போன் 6 குறித்த அறிவிப்பையும் வெளியிட்டது ஆப்பிள் விரைவில் ஐ போன் 6 வெளிவர இருப்பதாக டிம் குக் தெரிவித்தார் இதன் விலை 60 ஆயிரமாகும்.
ஹோம்கிட்
மேலும் ஹோம்கிட்(Homekit) என்ற ஆப்ஸையும் ஆப்பிள் வெளியிட உள்ளது இதன் மூலம் நமது வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் சாதனங்களை ஐ போனுடன் கனேக்ட் செய்து இயக்கலாம்
ஸ்வைப் மெசேஜ்
தற்போது ஆண்ட்ராய்டு மொபைல்களில் உள்ளது போல ஸ்வைப் மெசேஜிங் ஆப்ஷன்ஸை இனி ஐ போன்களிலும் நாம் பயன்படுத்தலாம்
ஐ க்ளவுட்
ஐ க்ளவுட்(iCloud) மெமரி பற்றியும் ஆப்பிள் அறிவித்துள்ளது இதன் மூலம் ஐ போன் யூஸர்ஸ் கூகுள் ட்ரைவ் போல தங்களது படம், மற்றும் பைல்களை இதில் ஆன்லைனில் சேமித்து கொள்ளலாம்
3D ஐ
போனில் 3D கேம்களும் இனி விளையாட ஆப்ஸ் வெளியிட இருக்கிறது ஆப்பிள்
இந்த கான்பிரன்ஸில் உலகம் முழுவதும் இருந்து பல ஆயிர கணக்காண சாப்ட்வேர் டெவலப்பர்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை