சகல பாதுகாப்பு வசதிகளுடன் மும்பையில் புதுவீடு வாங்கிய ஸ்ருதி
கல பாதுகாப்பு வசகளுடன் கூடிய புதிய வீட்டை மும்பையில் வாங்கி குடியேறினார் நடிகை ஸ்ருதிஹாஸன். தமிழ், தெலுங்கு, இந்தியில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாஸன், கடந்த ஆண்டு வரை மும்பையில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். சில மாதங்களுக்கு முன் ஸ்ருதிஹாசன் அவரது ரசிகன் என்று கூறிக் கொண்டு வந்த ஒருவர் திடீரென தாக்கினார். ஸ்ருதி ஹாஸன் அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பினார். பிறகு போலீசார் தாக்கியவனை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சில நாட்கள் தோழி வீட்டில் தங்கி இருந்தார். பிறகு பலத்த பாதுகாப்புடன் வாடகை வீட்டுக்கே திரும்பி சென்றார். இருந்தாலும் சொந்தமாக வீடு வாங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். மும்பை அந்தேரி பகுதியில் இரண்டு படுக்கை அறையுடன் அவருக்கு பிடித்த வகையில் ஒரு வீடு கிடைக்க, அதை உடனடியாக பேசி முடித்து, குடி புகுந்துவிட்டார். இந்த வீட்டுக்குப் பக்கத்து வீடுகளில் நடிகர் இம்தியாஸ் அலி, நடிகை பிராச்சி தேசாய் போன்ற சினிமா பிரபலங்கள் வசிப்பதால், பயமின்றி இருக்கலாம் என நினைத்து குடிவந்திருக்கிறாராம். இருந்தாலும் பாதுகாப்புக்கு இரு காவலாளிகளை நியமித்துள்ளாராம் ஸ்ருதி.
கருத்துகள் இல்லை