• Breaking News

    இதுவரை நீங்கள் 2,000 ரூபாவை பெறவில்லையா?

     வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிர்வரும் தினங்களில் வழங்க பிரதேச செயலாளர் மட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளபப்படும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

    இதுவரையில் 5 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    இதேவேளை, யாழ் மாவட்டத்தில் 36 ஆயிரம் குடும்பங்களுக்கு தற்போது 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேஷன் கூறினார்.

    மொனராகலை மாவட்டத்தில் 48 ஆயிரத்து 602 குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்தார்.

    இதுவரை மாவட்டத்தில் 6 கோடி 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட நிதி வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad