பிரதமரின் உடல்நலம் குறித்து வெளியாகியுள்ள செய்தி
பிரதமர் மகிந்த ராஜபக்ச உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகள் முற்றிலும் பொய்யானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் ஊடகப் பிரிவு, இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, வழக்கம் போல தனது உத்தியோகபூர்வ கடமைகளை மேற்கொள்வதாகப் பிரதமரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஏற்கனவே, இரண்டு நாட்களுக்கு முன்னரும் பிரதமர் தொடர்பில் வெளியான உடல்நலம் தொடர்பான செய்தியும் பொய்யானது என்று, பிரதமரின் தலைமை அதிகாரியும் அவரின் மகனுமான யோஷித்த ராஜபக்ச தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை