அமைச்சர் பந்துலவிற்கும் தொற்றியது கொரோனா
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனது அதிகாரிகள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தான் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை நடத்தியதில் தனக்கும் கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடன் அண்மைக் காலத்தில் நெருங்கி பழகியவர்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் பந்துல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.
அமைச்சர் பந்துலவுடன் சேர்த்து இந்த மாதத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை