• Breaking News

    5 கோடி பெறுமதியான போதைப் பொருட்களுடன் யாழில் மூவர் கைது!

     ரூபா 5 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா என்பவரை கடத்தி வந்த மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    குறித்த சந்தேகநபர்கள் மூவரும் யாழ். பொலிகண்டி பகுதியில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இரண்டரை கோடி ரூபா பெறுமதியான 2 கிலோக்கிராம் ஐஸ் போதைப் பொருட்கள்  மற்றும் இரண்டரை கோடி ரூபா பெறுமதியான 120 கிலோக்கிராம் எடையுடைய கேரள கஞ்சா என்பன அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

    கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்கள் மூவரும் மாங்குளம், இரணைமடு மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த 28, 38 மற்றும் 34 வயது உடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad