• Breaking News

    தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு போதுமானது அல்ல!

     இலங்கையில் கொரோனா நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு போதுமானது அல்ல என தேசிய மக்கள் சக்தி செயலாளர், மருத்துவர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

    எனவே சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு செவிசாய்த்து, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

    கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, மரணங்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை, வைத்தியசாலைகளின் இடவசதி மற்றும் வைரஸின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பயணக் கட்டுப்பாடுகளின் காலம் தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் மருத்துவர் நிஹால் அபேசிங்க குறிப்பிட்டார்.

    மேலும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, தடுப்பூசி மட்டும் தீர்வு அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்துவதற்கு பதிலாக அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட திட்டமே அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    அத்துடன் தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ள, மூன்று வாரங்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு நிபுணர்கள் பரிந்துரைத்தனர். இதனால் மேலும் 10 நாட்கள் முடக்கத்தை நீடிப்பது குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வைத்தியர் நிஹால் அபேசிங்க வலியுறுத்தியுள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad