காணாமல் போயுள்ள குடும்ப பெண் மற்றும் பிள்ளைகள் - தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை
வீட்டிலிருந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என நபரொருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
வவுனியா - முதலாம் ஒழுங்கை, மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த சற்குணசிங்கம் தமிழினி (வயது 32) மற்றும் பிள்ளைகளான டனிஸ்கா (வயது 5), கனிஸ்கா (வயது 4) ஆகியோரே காணாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் கடந்த 2021.08.10 அன்று வீட்டில் இருந்துள்ள நிலையில் கணவர் காலையில் வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது அவர்கள் வீட்டில் இருக்கவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட குறித்த முறைப்பாட்டில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை