• Breaking News

    முறைப்பாடளித்த பொதுமக்கள்! விரைந்து செயற்பட்ட பொலிஸார் - பலர் கைது

     மட்டக்களப்பு வாகரை புச்சாக்கேணி பிரதேசத்தில் பல்வேறு குற்றச் செயலகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 3 நபர்களை கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    இந் நபர்களிடமிருந்து புச்சாக்கேணி கிராமத்தில் உள்ள தோட்டங்கள் மற்றும் வீடுகளிலிருந்து திருடப்பட்ட 7 நீர் இறைக்கும் இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

    சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

    கிராமத்தில் தொடர்ச்சியாக நீர் இறைக்கும் இயந்திரங்கள் திருடப்பட்டு வந்த நிலையில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதனையடுத்த மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந் நபர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகாத்மாசிங்க மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.ஜெயசுந்தர ஆகியோர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் இவ் குற்றச் செயல் தடுக்கப்பட்டதுடன் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு.எம்.விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

    கைது செய்யப்பட்டவர்கள் நேற்றையதினம் வாழைச்சேனை மாவட்ட நீதி மன்ற நீதிபதி எம்.எச்.எம். பசில் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது சந்தேக நபர்களை எதிவரும் 18ஆம் திகதி வரை ஆம்  விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்தார்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad