• Breaking News

    ஆசிரியர்கள் அதிபர்கள் ஒன்றிணைந்து கண்டியிலிருந்து கொழும்புக்கு ஆரம்பமானது பேரணி

     தமக்கான சம்பளத்தை உயர்த்துமாறு தெரிவித்து ஆசிரியர்களும், அதிபர்களும் ஒன்றிணைந்து இன்று முற்பகல் 11.30 மணி அளவில் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி தங்களது நடைபவணியை ஆரம்பித்துள்ளனர்.

    கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக இவர்கள் இந்த நடைபவனியை தொடங்கியுள்ளனர்.

    எங்கள் உரிமையை பறிக்காதே, எங்கள் வழி தனி வழி சம்பளத்தை உயர்த்து,உயர்ந்த சம்பளம் வேண்டாம் உரிய சம்பளம் வேண்டும் போன்ற பதாதைகளை தாங்கியவாறு பேரணியில் பெருமளவில் ஆசிரியர்களும் அதிபர்களும் பங்கேற்றுள்ளனர்.





    இதேவேளை தற்போதைய நிதி நிலை நெருக்கடியில் ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க முடியாதென அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad