• Breaking News

    யாழில் பட்டப்பகலில் நகை திருட்டு - வட்டுக்கோட்டை தமிழ் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் ஒருவர் கைது!

    வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டு மேற்கு - கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து இரண்டரை பவுண் நகை திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

    கடந்த 4 ஆம் திகதி வீட்டின் உரிமையாளர்கள் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் அவர்களது வீட்டில் இருந்த இரண்டரை பவுண் நகை களவாடப்பட்டுள்ளது.

    வீட்டில் வைத்த நகைகளை நேற்றைய தினம் (2021.08.06) பார்த்தபோது, நகைகள் வைத்த இடத்தில் இல்லாத நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

    வட்டுக்கோட்டை பொலிஸார் சி.சி.டிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை இன்று (2021.08.06) கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

    குறித்த சந்தேக நபர் தானே நகைகளை திருடியதாகவும், அவற்றில் இரண்டு பவுண் நகை நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும், மிகுதி அரைப் பவுண் நகை தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்து தன்னிடம் இருந்த நகையை பொலிஸாரிடம் கையளித்தார்.

    கைது செய்யப்பட்டவர் மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க நபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

    இவருடன் இணைந்து திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட இன்னொரு நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad