ஜெனிவாவின் பிடிக்குள் சிக்காதீர் - ராஜபக்ச அரசுக்கு அட்வைஸ்
வெள்ளை வான் கலாசாரத்தை மீண்டும் ஆரம்பித்து, ஜெனிவா நெருக்கடிக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
அதிபர் - ஆசிரியர்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், பல்கலைக்கழக மாணவர்கள் சுதந்திர கல்வியை பாதுகாப்பதற்காகவும் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்களை அடக்குமுறை ஊடாக முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.
அரசாங்கத்தின் தொடர்ச்சியான அடக்குமுறைகள் எதிர்காலத்தில் அதற்கு எதிராகவே அமையும்.
இதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும்.
எனவே கைது செய்யப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் சகலருக்கும் எதிரான வழக்குகளையும் இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை