கருணாவை உடன் கைது செய்யுங்கள் - தேரர் கோரிக்கை
அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா இதனை உயர் நீதிமன்றின் நீதியர்சர்களான பிரியந்த ஜயவர்தன, அச்சல் அவெங்கப்புலி மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் அறிவித்துள்ளார்.
குறிப்பாக, குறித்த படுகொலைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர் என அவர் அடையாளப்படுத்தும் புலிகள் அமைப்பின் முன்னாள் பிரதானிகளில் ஒருவரான விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணாவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை