பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டம் ஹம்பாந்தோட்டையில் நிறைவு!
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழி போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி காங்கேசன்துறையில் ஆரம்பமான போராட்டம் இன்று (02.10.2022) ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்டு நிறைவு எய்தியது.
இந்த கையெழுத்து போராட்டத்தில் பலரும் இணைந்து கொண்டு தமது கையெழுத்துக்களை பதிவு செய்ததை அவதானிக்க முடிந்தது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும், சர்வஜன நீதி அமைப்பும் முன்னெடுத்த கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.









கருத்துகள் இல்லை