• Breaking News

    இலங்கையர்கள் கண்டிப்பாக வரி செலுத்தியே ஆக வேண்டும்! வேறு வழியில்லை

     


    நாட்டின் தற்போதைய நிலையில் வரி அறவிடுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை என்று  இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.  

    ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

    நாட்டில் உள்ள 68 இலட்சம் குடும்பங்களில் 40 இலட்சம் குடும்பங்கள் நிவாரணங்களை  கோருவதாகவும், அவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு வரி அறவிடுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை என்றும் அவர் கூறினார்.


    18 இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் சமுர்த்தி உதவிகளை பெறுகின்றனர். 4 இலட்சத்து 16 ஆயிரத்திற்கும் அதிக குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் முதியோர் கொடுப்பனவை பெறுகின்றனர்.

    இதுதவிர, விசேட தேவையுடையோர் மற்றும் ஏனைய நிவாரணங்களையும் பலர் பெறுகின்றனர். இதற்கு மேலதிகமாக புதிதாகவும் உள்வாங்கப்படவுள்ளனர்.

    இவ்வாறானதொரு நிலையில், வரி அறவிடுவதன் மூலமே அந்த கொடுப்பனவுகளை செலுத்த முடியும் என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேலும் குறிப்பிட்டார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad