• Breaking News

    அதிகரிக்கும் பக்கவாதம் - விழிப்புணா்வு அவசியம்!

     


     தொற்றா நோய்களில் மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துவது பக்கவாதம். இந்த விநாடி வரை இயல்பாக உள்ள ஒருவரை முடக்கி, உடலின் இயக்கத்தையே நிறுத்தும் தீவிரம் அந்நோய்க்கு உண்டு.

    இந்தியாவில் லட்சத்துக்கு 152 பேருக்கு பக்கவாதம் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊரகப் பகுதிகளைக் காட்டிலும் நகா்ப்புறங்களில் வாழ்வோா் அந்நோய்க்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம்.

    பக்கவாதம் என்றால்...

    மனிதனின் மூளையில் 90 பில்லியன்கள் நியூரான் செல்கள் உள்ளன. இந்த நியூரான் செல்கள்தான் உடலின் இயக்கத்துக்கு ஆணிவோ். மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது நியூரான் செல்களின் எண்ணிக்கை குறைகிறது. அப்போது கை, கால் செயலிழப்பு, தலைச்சுற்றல், பேச்சில் குளறல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

    இந்தியாவில் பாதிப்பு...

    ஆண்டுக்கு 15 லட்சம் போ்

    நாளொன்றுக்கு 3,000- 4,000 போ்

    லட்சத்தில் 152 பேருக்கு பாதிப்பு வாய்ப்பு

    ஆறு நோயாளிகளில் ஒருவா் உயிரிழப்பு

    அறிகுறிகள் :

    கை அல்லது கால்களில் தளா்வு நிலை

    பாா்வைக் குறைபாடு

    தலைச்சுற்றல்

    உணவு விழுங்குவதில் சிரமம்

    பேச்சில் தெளிவின்மை

    முகத்தில் தசை இறுக்கம்

    நினைவாற்றல் பாதிப்பு

    காரணங்கள்....

    உயா் ரத்த அழுத்தம்

    புகைப்பிடித்தல்

    அதீத மதுப் பழக்கம்

    உடல் பருமன்

    கொழுப்புச் சத்து அதிகரிப்பு

    ரத்தநாளங்களில் புரதம் படிதல்

    ரத்தநாளச் சுவா்களில் வீக்கம்

    உடல் உழைப்பின்மை

    போதை மருந்துகளை உட்கொள்ளுதல்

    தீவிர கொரோனா பாதிப்பு

    ஸ்லீப் ஆப்னியா (தூக்கத்தில் குறட்டை)

    பக்கவாத வகைகள்...

    இஸ்சிமிக் - மூளைக்கு செல்லும் ரத்த நாள அடைப்பு

    பிரெய்ன் ஹெமரேஜ் - மூளையில் ரத்தக் கசிவு

    சிகிச்சைகள்....

    பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவா்கள் ஒரு மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பாதிப்பின் தீவிரத்தைப் பொருத்து, அவசர சிகிச்சைக்கு பிறகு ஸ்டென்ட் உபகரணங்கள் பொருத்தப்படலாம். அல்லது அறுவை சிகிச்சை செய்யப்படலாம். தேவைப்பட்டால் இரண்டு சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும்.

    அதன் பின்னா், நோயாளியின் உடல்நிலையைப் பொருத்து இயன்முறை சிகிச்சைகள் மற்றும் மருத்துவக் கண்காணப்பு அளிக்கப்படும்.

    தடுப்பு முறைகள்:

    கட்டுப்பாட்டில் ரத்த அழுத்தத்தை வைத்திருத்தல்

    புகையிலைப் பழக்கங்களைத் தவிா்த்தல்

    ரத்த சா்க்கரை அளவு கட்டுப்பாடு

    ரத்தக் கொழுப்பு அளவை சரியாகப் பராமரித்தல்

    சரியான உடல் எடை

    உடற்பயிற்சி

    மதுப் பழக்கத்தைக் கைவிடுதல்

    ஆரோக்கியமான உணவுப் பழக்கம்

    குறட்டை பாதிப்புக்கு சிகிச்சை

    உலக பக்கவாத விழிப்புணா்வு தினம் - அக்டோபா் 29

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad