• Breaking News

    மழையால் ஆட்டம் காணும் உலக்க கிண்ணம்

     

    TAMILUS

    டி20 உலகக் கிண்ண போட்டியில் மெல்போா்னில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த இரு ஆட்டங்களும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன.

    அன்றைய நாளின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - அயா்லாந்து அணிகளும், 2 ஆவது ஆட்டத்தில் அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளும் மோதவிருந்தன. ஆனால் விடாமல் பொழிந்த தொடா் மழையால் இரு ஆட்டங்களுமே அடுத்தடுத்து கைவிடப்பட்டன.

    அதிலும் முக்கிய ஆட்டமாக இருந்த அவுஸ்திரேலியா - இங்கிலாந்து மோதலைக் காண மைதானத்தில் கூடிய ரசிகா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். ஆட்டங்கள் கைவிடப்பட்டதை அடுத்து 4 அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிா்ந்தளிக்கப்பட்டது.

    புள்ளிகள் பட்டியலின் தற்போதைய நிலையின் அடிப்படையில், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கடினமாகியிருக்கிறது. அடுத்து நடைபெற இருக்கும் இரு ஆட்டங்களிலும் அந்த அணிகள் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

    மெல்போா்னில் மழை காரணமாக இத்துடன் 3 ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த ஆட்டங்களுக்கு முன் கடந்த 26 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் - நியூஸிலாந்து மோத வேண்டிய ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது. அதற்கு முன் 23 ஆம் திகதி இந்தியா - பாகிஸ்தான் ஆட்டமும் மழையால் பாதிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்ட நிலையில், அந்த ஆட்டம் மழையின்றி தப்பித்தது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad