சிப்லி, பென் ஸ்டோக்ஸ் சதம் வலுவான நிலையில் இங்கிலாந்து
மேற்கு இந்தியத்தீவுகள், இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையே மான்செஸ்டரில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து, 469 ஓட்டங்கள் எடுத்தபோது ஆட்டத்தை நிறுத்தியது. மேற்கு இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 32 ஓட்டங்கள் எடுத்தபோது இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுற்றது.
மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்கிய
இரண்டாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 81 ஓட்டங்ககுள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் பிறகு தொடக்க வீரர் டாம் சிப்லியும், பென் ஸ்டோக்சும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 207 ஓட்டங்கள் எடுத்திருந்தது. சிப்லி 86 ஓட்டங்களுடனும், ஸ்டோக்ஸ் 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல்
இருந்தனர்.
இரண்டாவது நாளான நேற்று தொடர்ந்து நிதானமாக ஆடிய சிப்லி தனது இரண்டாவது சதத்தை நிறைவு செய்தார். சதத்தை எட்ட அவருக்கு 312 பந்துகள் தேவைப்பட்டது. இங்கிலாந்து மண்ணில் 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு அடிக்கப்பட்ட மந்தமான சதம் இதுதான். உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை அசைக்க முடியவில்லை.
உணவு இடைவேளைக்கு பிறகு பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஸ்டோக்ஸ் தனது 10- ஆவது சதத்தை எட்டினார்.
இங்கிலாந்து அணி 341 ஓட்டங்கள் எடுத்தபோது டாம் சிப்லி ஆட்டமிழந்தார் சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேஸ் வீசிய பந்தை தூக்கியடித்த . டாம் சிப்லி (120ஓட்டங்கள், 372 பந்து, 5 பவுண்டரி) கெமார் ரோச்சிடம் பிடிகொடுட்து ஆட்டமிழந்த்தார். மறுமுனையில் மிரட்டிய பென் ஸ்டோக்ஸ் 176 ஓட்டங்களில் (356 பந்து, 17 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். பின்வரிசையில் ஜோஸ் பட்லர் (40 ஓட்டங்கள்), டாம் பெஸ் (31 ஓட்டங்கள்) எடுத்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 162 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 469 ஓட்டங்கள் குவித்து முதல் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டு வந்தது. மேற்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கெமர் ரோச் இரண்டு விக்கெற்களும்,ஜோசப், ஹோல்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
மேற்கு இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 32 ஓட்டங்கள் எடுத்தபோது இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பிராத்வேட் 6 ஓட்டங்களுடனும், ஜோசப் 14ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
முதல் டெஸ்ட்டில் 4000 ஓட்டங்கள் எடுத்து, 150 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை செய்த பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது டெஸ்ட்டிலும் ஒரு சாதனை செய்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 10 சதங்கள் அடித்து, 150 விக்கெட்கள் வீழ்த்திய ஐந்தாவது சகலதுறை வீரராக பென் ஸ்டோக்ஸின் பெயர் பதியப்பட்டுள்ளது.
முதல் நான்கு இடங்கலில் முறையே சோபர்ஸ், போத்தம், ரவி சாஸ்திரி, ஜக் கலிஸ் ஆகியோர் உள்ளனர்.
மேற்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான கெமர் ரோச் 2019 ஆம்
ஆண்டு செப்ரெம்பர் முதலாம் திகதி விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர்
நேற்ருத்தான் அடுத்த விக்கெட்டை வீழ்த்தினார்,
86.5 ஓவர்களின் பின்னர் அடுத்தடுத்த
பந்துகளில் ஸ்டோக்ஸ், வோக்ஸ் ஆகிய இருவரையும் வீழ்த்தி நிம்மதிப்
பெருமூச்சு விட்டார்.
கருத்துகள் இல்லை