• Breaking News

    அனைத்து சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளையும் இரத்து செய்தது சீனா

     

     சீனாவில் இந்த வருடம் நடைபெற இருந்த அனைத்து சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலாக சீனாவில் கண்டறியப்பட்டது. ஊரடங்கு, அதிகப்படியான சோதனை ஆகியவற்றின் மூலம் நோயை கட்டுப்படுத்தியது. என்றாலும் தற்போது பீஜிங் போன்ற முக்கியமான நகரில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    இதனால் இந்த வருடம் நடைபெற இருக்கும் அனைத்து சர்வதேச விளையாட்டு போட்டிகள் அனைத்தையும் ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது.

    2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான சோதனை மட்டும் நடைபெறும் என்று அறிவித்துள்ள சீனா, பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் ஆறு தொடர்கள் (பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் இறுதி தொடர் உள்பட) இரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆண்களுக்கான நான்கு தொடர்களையும் நடத்த திட்டமிட்டிருந்தது.

    ஒக்டோபர் மாதம் ஆசிய விளையாட்டு கிளிம்பிங் சாம்பியன்ஷிப், டிசம்பர் மாதம் பேட்மிண்டன் உலக டூர் இறுதிப் போட்டியும் நடைபெற இருந்தது. அதேபோல் ஒக்டோபர் மாதம் இரண்டு சைக்கிள் தொடரும் நடைபெற இருந்தது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad