• Breaking News

    வெனிசுவெலாவில் டிசம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும்

    வெனிசுவெலாவில் டிசம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    எண்ணெய் வளமிக்க தென்னமெரிக்க நாடான வெனிசுலாவில் பொருளாதார நெருக்கடியும் அரசியல் குழப்பமும் நீடிக்கிறது. அந்த நாட்டின் ஜனாதிபதி  நிக்கோலஸ் மதுராவை பதவியிலிருந்து இறக்கி விட்டு அங்கு புதிய ஆட்சியை அமைப்பதற்கு அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது.

    இந்த வாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. வெனிசுவெலா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.

    இந்த நிலையில் அரசியல் குழப்பம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வெனிசுவெலாவில் வருகிற டிசம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து வெனிசுலா தேர்தல் ஆணையத்தின் தலைவர் இந்திரா அல்போன்சோ இசாகுயர் கூறுகையில் “277 உறுப்பினர்களை கொண்ட வெனிசூலா பாராளுமன்றத்திற்கு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறும்எனக் கூறினார்.

    எனினும் தேர்தலுக்கான தேதியை அவர் அறிவிக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண கவர்னர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என இந்திரா அல்போன்சோ இசாகுயர் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad