• Breaking News

    முதல் இன்னிங்ஸில் ஹோல்டர் ஆதிக்கம்

    இங்கிலாந்து-மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. கொரோனா அச்சம் எதிரொலியாக உயர்மட்ட மருத்துவ பாதுகாப்புக்கு மத்தியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடக்கும் இந்த போட்டி உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற  இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. மழையால் 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட தொடக்க நாளில் ஒரு விக்கெட்டுக்கு 35 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

    இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இங்கிலாந்து  தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது. ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 204 ஓட்டங்கள் எடுத்தது.

      ஜோ டென்லி (18 ஓட்டங்கள்), தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் (30 ஓட்டங்கள்),)  
    அடுத்து வந்த ஜாக் கிராவ்லி (10 ஓட்டங்கள்), ஆலிவர் போப் (12 ஓட்டங்கள்) ஆகியோரை மேற்கு இந்திய அணியின் கப்டன் ஜாசன் ஹோல்டர் ஆட்டமிழக்கச்செய்தார். அப்போது இங்கிலாந்து அணி 87 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது.

    இதன் பின்னர் பொறுப்பு கப்டன் பென் ஸ்டோக்சும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும் கைகோர்த்து அணியை தூக்கி நிறுத்த போராடினர். ஒரு ஓட்டம் எடுத்தபோது ஆட்டமிழப்பில் இருந்து தப்பித்த ஸ்டோக்ஸ் 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

    அப்போது இங்கிலாந்து 154 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

    பென் ஸ்டோக்ஸைத் தொடர்ந்து 35 ஓட்டங்கள் எடுத்தபோது ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்தார்.கடைசிக் கட்டத்தில் டாம் பெஸ் 31 ஓட்டங்கள் எடுத்ததால் இங்கிலாந்து 200 ஓட்டங்களைக் கடந்தது.

      இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 67.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 204 ஓட்டங்கள் எடுத்தது.

    மேற்கு இந்தியத்.தீவுகள் அணியின்  கப்டன் ஜேசன் ஹோல்டர் 20 ஓவர்கள் வீசினார். அதில் ஆறு ஓட்டமற்ற ஓவர்களாகும். 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த ஹோல்டர் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சாளர் ஷனன் கேப்ரியல் 15.3ஓவர்களில் 62 ஓட்டங்களைக் கொடுத்து  4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

     மேற்கு இந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. 18 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 1 விக்கெட்டுக்கு 56 ஓட்டங்கள் எடுத்திருந்தது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad