• Breaking News

    கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும்

    சுகாதாரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க தவறினால் கொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    ஐரோப்பிய, ஆசிய நாடுகள் பல கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளன.இருப்பினும் இன்னமும் பல நாடுகள் தவறான திசையில் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. 

    அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் பின்பற்றாமல் போனால் கொரோனா அதன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும்.இப்போது இருக்கும் நிலைமையைவிட படுமோசமாக உச்சகட்ட மோசமான அழிவை ஏற்படுத்தும். 

    அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களுக்கு  தெளிவாக விளக்க வேண்டும். பரவுதல் மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவதை மையமாகக் கொண்ட ஒரு விரிவான திட்டத்தை வகுக்க வேண்டும். மக்கள் சமூக இடைவெளி , கை கழுவுதல், முகக்கவசம் அணிவது, இருமல் மற்றும் தனிமைபடுத்துதல் போன்ற அடிப்படை பொது சுகாதாரக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்றால் இந்த நோய் நம்மை மோசமான நிலைக்கை இழுத்து செல்லும்

    என தெரிவித்துள்ளார்.

     


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad