ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய தொழிலாளி
தான்சானியா நாட்டை சேர்ந்த சுரங்க தொழிலாளி ஒருவர் ஒரே நாளில் பல கோடிகளுக்கு சொந்தகாரரான சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தான்சானியா நாட்டை சேர்ந்தவர் சுரங்க தொழிலாளியான சானினியு லைசர். இவர் அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் டான்சனைட் எனப்படும் இரண்டு இரத்தின கற்களை கண்டுபிடித்துள்ளார். ஒரு இரத்திக்கல்லின் நிறை 9.27 கிலோவும், மற்றொன்றின் நிறை 5.8 கிலோவும் இருந்துள்ளது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இரத்தின கற்களில் இவைதான் மிகப்பெரிய கற்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் சுரங்க தொழிலாளர்கள் தங்களிடம் இருக்கும் கற்களை அரசாங்கத்திடம் விற்கும் வகையில் அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்த வர்த்தக மையம் மூலம் சானினியு லைசர் தான் கண்டுபிடித்த கற்களை விற்பனை செய்துள்ளார்.
அந்த கற்களுக்கு பணமாக 7.74 பில்லியன் தான்சானியன் ஷில்லிங்ஸ் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதவாது, இந்திய மதிப்புப்படி சுமார் 25 கோடிக்கும் மேல். இதுகுறித்து பேசியுள்ள சானினியு லைசர், இந்த பணம் மூலம் மிகப்பெரிய ஷாப்பிங் மால் ஒன்றை கட்ட இருப்பதாகவும், தனது வீட்டின் அருகில் இலவச பள்ளி ஒன்றையும் கட்ட இருப்பதாக கூறியுள்ளார்.
குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்செல்லும் அளவிற்கு வசதி இல்லாத அதிகமான மக்கள் இந்த பகுதியில் இருப்பதாகவும், அவர்களுக்காக இந்த பள்ளியை கட்ட இருப்பதாகவும் கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் சானினியு லைசர்.
கருத்துகள் இல்லை