• Breaking News

    சதொச விற்பனை நிலையங்களில் சீனியை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்

     வவுனியா சதொச விற்பனை நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சீனியைப் பெற்றுச் செல்வதை அவதானிக்க முடிவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை அறிவித்துள்ளது.

    அத்துடன், அப் பொருட்களை நாடு பூராகவும் உள்ள சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில், சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள வவுனியா மாவட்டத்தில் உள்ள 14 சதொச விற்பனை நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிரைசயில் நின்று சீனியைப் பெற்றுச் செல்கின்றனர்.

    ஒருவருக்கு மூன்று கிலோகிராம் வீதம் சீனி விநியோகிக்கப்பட்டு வருவதுடன், சிவப்பு சீனி 125 ரூபாய்க்கும், வெள்ளை சீனி 122 ரூபாய்க்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

    கடந்த சில நாட்களாக வவுனியாவிலும் சீனிக்குத் தட்டுப்பாடு நிலவியதுடன், தனியார் விற்பனை நிலையங்களில் 200 ரூபாய்க்கு மேல் சீனி விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் குறைந்த விலையில் சீனியைப் பெற்று கொள்வதற்காக அதிகளவிலான மக்கள் கோவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சதொசவிற்கு வருகை தந்து சீனியைப் பெற்றுச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad