• Breaking News

    இலங்கையில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்ட சிறுவர்களுக்கு நடந்தது என்ன?

     இலங்கையில் இதுவரை 500 சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியை பெற்றுக் கொண்டபின் சிறுவர்களுக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டதாக இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    இதையடுத்து, 12 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட நோயாளர்களான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    அந்த வகையில், நாடு முழுவதும் நோயாளர்களான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகள் மூலம் முன்னெடுக்கப்படும் என்று சிறுவர் நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

    அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

    12 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட நோயாளர்களான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் கடந்த 24 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.

    சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் தற்போது ஐந்து மாவட்டங்களில் மாத்திரமே இடம்பெற்று வருகின்றன.

    எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஏனைய மாவட்டங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 500 சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியை பெற்றுக் கொண்டபின் சிறுவர்களுக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டதாக இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை.

    நான்கு வாரங்களில் அவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்படுவதுடன் மூன்றாவது தடுப்பூசி பெற்றுக் கொடுப்பதற்கு இதுவரை எந்த வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad