• Breaking News

    தென்னிலங்கையில் கொவிட்டை விட மற்றுமொரு ஆபத்து - 2 நாட்களில் இருவர் மரணம்

     தென்னிலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்கு அப்பால் எலிக்காய்ச்சல் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

    ஹிக்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையும், பென்தர, கோனகலபுர பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் வயல்களில் தொழில் செய்யும் போது காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

    இதன் பின்னர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவர்கள் இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எலிக்காய்ச்சலினால் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    கொவிட் தொற்றுக்கு மேலதிமாக தற்போது எலிக்காய்ச்சலும் பரவ ஆரம்பித்துள்ளதாக வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad