• Breaking News

    முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரை அடித்து விரட்ட வேண்டும் - நாடாளுமன்றத்தில் சாணக்கியன் சீற்றம்

     ரிசாத் அசாத் சாலி பேசினால் இனவாதம், ஆனால் ஞானசாரர் பேசினால் அது இனவாதம் இல்லையா? நான் இங்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இங்கு கூச்சலிடும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் தனது தொகுதிக்கு வந்தால், அவரை போன்றவர்களை மக்கள் அடித்து விரட்ட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

    "ஞானசார தேரர் கடும் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகிறார். அவரது கருத்துக்களும் அவ்வாறே உள்ளன. நாங்கள் இனவாதமாக செயற்படும் மத தலைவர்களுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடுகிறோம்.

    இந்த நாட்டில் 500 அடிப்படைவாத கிறிஸ்தவ தேவாலயங்கள் இருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு இஸ்லாமிய தலைவர்களை கைது செய்யுமாறும், ஜனாதிபதியை பதவிக்கு கொண்டுவருவதற்காக சுமார் 800 முறை மத வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அடிப்படைவாத தாக்குதல்தாரிகளின் சூத்திரதாரி அல்லாஹ்தான என ஞானசார தேரர் தெரிவித்திருக்கின்றார். அவரின் கருத்தை கண்டிக்கிறேன்.

    இந்த கருத்து தொடர்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பது ஏன்? ரிசாத் அசாத் சாலி பேசினால் இனவாதம், ஆனால் ஞானசாரர் பேசினால் அது இனவாதம் இல்லையா?

    நான் இங்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இங்கு கூச்சலிடும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் தனது தொகுதிக்கு வந்தால், அவரை போன்றவர்களை மக்கள் அடித்து விரட்ட வேண்டும்" என்றார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad