• Breaking News

    வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை மீண்டும் இலக்கு வைக்கிறதா ராணுவம்? சுமந்திரன் நேரில் சென்று ஆராய்வு

     யாழ். வலி வடக்கு பகுதியில் கடந்த ஆட்சிக்காலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளை படையினர் மீளவும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் குறிப்பிட்ட பகுதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.


    வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் ஆகியோருடன் இணைந்து அப்பகுதிக்குச் சென்ற எம்.ஏ.சுமந்திரன் நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.

    கடந்த கால ஆட்சியில் விடுவிக்கப்பட்ட காணிகளை இராணுவத்தினர் மீள கையகப்படுத்தும் நோக்குடன், காணிகளில் "இது இராணுவத்திற்கு சொந்தமான காணி" என எழுதிய பலகைகளை நாட்டியுள்ளனர்.

    ஆகையால் இராணுவத்தினர் பலகை நாட்டிய காணி உரிமையாளர்கள் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர், மற்றும் வடக்கு பிரதேச செயலர் ஆகியோருக்கு முறையிட்டிருந்தனர்.

    இந்த நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு நிலைமைகளை ஆராய்ந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad