கொழும்பின் முக்கிய நடைபாதை சீனர்களால் மூடப்பட்டது! காரணம் வெளியானது
சீன நாட்டவரின் மேற்பார்வையின் கீழ் வந்த குழு ஒன்றினால் கொழும்பு கோட்டையில் உள்ள முக்கிய நடைபாதை நேற்று(29) பிற்பகல் முதல் மூடப்பட்டுள்ளது.
கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து, கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயில், சுங்கத் தலைமையகத்திற்கு அருகில் வரையான நடைபாதையே மூடப்பட்டது.
இந்த நடைபாதை 2015 இல் கட்டப்பட்டது.
மேலும், சீன நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு இந்த நிலம் கொடுக்கப்பட்டதால் குறித்த நடைபாதை மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை