• Breaking News

    சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் வெளியானது விசேட வர்த்தமானி!

     கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல், செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரையான காலப் பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தின் செலுப்படியாகும் கால எல்லையை, அரசாங்கம் நீடித்துள்ளது.

    அதனடிப்படையில், காலாவதியாகும் திகதியிலிருந்து ஒரு வருடம் வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சரினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன், ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையான கால எல்லைக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான கால எல்லையை, காலாவதியாகும் திகதியிலிருந்து மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad