வெள்ளைப்பூடு விவகாரம்: வர்த்தகர் ஒருவர் கைது!
லங்கா சதொச நிறுவனத்துக்குரிய 54 ஆயிரம் கிலோகிராம் வெள்ளைப்பூடு அடங்கிய 2 கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து வெளியேற்ற நிதி உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான வர்த்தகர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் ஹேசாந்த டீ மெல் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பேலியகொடை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளதுடன், தகவல்களை மறைத்தல், சட்டவிரோதமாகப் பொருள்களை விடுவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை