19 வயது யுவதிக்கு காதல் வலைவீசிய 61 வயது முதியவர் பொலிஸாரால் மடக்கிப்பிடிப்பு!
19 வயதுடைய யுவதி ஒருவரை அச்சுறுத்தி, கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்ள முயற்சித்த 61 வயதான நபர் ஒருவரை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யுவதியின் உறவினர் ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரின் மனைவி உயிரிழந்த , தனது உறவினரான 19 வயதான யுவதியில் காதல் வசப்பட்ட நிலையில் யுவதியை விட வயது அதிகமான பிள்ளைகள் இருக்கிறார்கள். கைதான சந்தேக நபர் வெல்லம்பிட்டியிலுள்ள வணக்கஸ்தலம் ஒன்றில் சாரதியாக கடமையாற்றி வந்துள்ளார்.
ஹிம்புட்டானில் உள்ள யுவதியின் வீட்டிற்கு அருகில் அவர் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். யுவதியின் தந்தை பல வருடங்களின் முன்னரே இறந்துவிட்டதால், சந்தேக நபர் 14 வயது முதல் யுவதியை தனது முச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையில் , யுவதியை காதலிப்பதாக தனது கைத்தொலைபேசியில் பல குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.
யுவதியின் தாயாரும் சுகயீனமுற்றிருந்ததாகவும், இந்த விடயம் தொடர்பில் அவருக்கு சரியான புரிதல் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து, பல்கலைக்கழகத்திற்கு அழைக்கப்படும் வரை யுவதி நிறுவனமொன்றில் வேலைக்குச் சென்றபோது , தனக்கு நேர்ந்த துன்புறுத்தல் குறித்து தனது நண்பரிடம் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர் யுவதி வேலை செய்யும் இடத்திற்குச் சென்று அங்குள்ள ஊழியர்கள் முன்னிலையில் யுவதியை அச்சுறுத்தியதுடன், தனது காதலை ஏற்காவிட்டால் கடத்திச் செல்வதாக மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த யுவதி, கடந்த 23ஆம் திகதி முல்லேரியா பொலிஸில் முறைப்பாடு செய்ததை கேள்வியுற்ற சந்தேக நபர், யுவதியை தொலைபேசியில் அழைத்து கண்டித்ததுடன் , எப்படியாவது கடத்திச் செல்வேன் என்றும் மிரட்டியுள்ளார்.
முல்லேரியா பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் யுவதி உட்கார்ந்திருந்த போது, இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன்போது யுவதி தனது கையடக்கத் தொலைபேசியின் ஸ்பீக்கரை செயற்படுத்தி, அச்சுறுத்தலை பொலிஸ் உத்தியோகத்தர்களையும் செவிமடுக்க வைத்துள்ளார்.
இதையடுத்து, பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அறிவுறுத்தியிருந்த நிலையில் , சந்தேகநபர் பல நாட்களாக தலைமறைவாக இருந்துள்ளார்.
அதன் பின்னர், விசேட பொலிஸ் குழுவொன்று அவர் கடமையாற்றிய வெல்லம்பிட்டி வணக்கஸ்தலத்திற்கு சென்று சந்தேக நபரை வெளியே அழைத்து வந்து கைது செய்துள்ளதுடன், சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை