யாழில் பட்டத்துடன் பறந்த இளைஞனுக்கு நேர்ந்த துயரம்...!
யாழ்ப்பாணத்தில் பட்டம் ஒன்றை பறக்க விட்டபோது இளைஞர் ஒருவர் பட்டத்துடன் 120 அடிக்கும் மேலும் பட்டத்துடன் இழுத்துச் செல்லப்பட்ட காணொளி கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது.
இந்த நிலையில், பட்டத்துடன் இழுத்துச் செல்லப்பட்ட குறித்த இளைஞனுக்கு முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
120 அடிக்கும் மேல் உயர இழுத்துச் செல்லப்பட்ட மனோகரன் என்ற குறித்த இளைஞர் முப்பது அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார்.
இதன்போது அவரது உடலில் அடிப்பட்டதாகவும், இதன் காரணமாக முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சம்பவத்தை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் மூன்று நாட்களின் பின்னர் சிகிச்சைப் பெற்று தனது விருப்பத்தின் பேரில் வீடு திரும்பியுள்ளார். எனினும், தற்போதும் முள்ளந்தண்டில் வலி ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை