• Breaking News

    எரிவாயு வெடிப்பை தடுக்க புதிய சாதனம்! தமிழ் மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

     


    கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை மாணவர் ஒருவர் தற்போதைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமான உபகரணம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

    தற்போது நாட்டின் பல பாகங்களிலும் எரிவாயு சிலிண்டர் (அடுப்பு) வெடிப்புச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்த வண்ணமே இருக்கின்றன. இதனால் மக்களின் உயிர் மற்றும் பொருட்கள் சேதங்களுக்குள்ளாகி வருகின்றன.

    இதற்குத் தீர்வாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள கமு/ கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி பயிலும் பாண்டிருப்பைச் சேர்ந்த பத்மநாதன் லதேஸ் எனும் மாணவனால் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு நடைபெறாமல் தடுப்பதற்காக Gas Safe Box எனும் புதிய கண்டுபிடிப்பொன்றை உருவாக்கியுள்ளார்.

    எரிவாயு சிலிண்டரிலிருந்து அதிக எரிவாயு கசிவு ஏற்படும் போது, எரிவாயு அடுப்புக்கள் வெடிக்கின்றன. அடுப்பில் உள்ள Sensor மூலம், வெடிப்பதற்கு முன்னரே Gas Safty Box உள்ள System ஆனது எரிவாயு கசிவை கட்டுப்படுத்துகின்றது. இதன் மூலம், எரிவாயு அடுப்பு வெடிப்பதை தடுப்பது மட்டுமன்றி மேலதிகமாக கசிவில் உள்ள எரிவாயுவையும் மீதப்படுத்துகிறது.

    எனவே, இதனால் எந்தவித சேதமுமின்றி பாதுகாப்பாகவும் பயமின்றியும் மக்கள் தங்களது சமையல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என கண்டுபிடிப்பாளரான லதேஸ் கூறியுள்ளார்.

    இருப்பினும் இம்மாணவனின் கண்டுபிடிப்புக்கான ஆக்கவுரிமைப் பத்திரம் இதுவரை பெறப்படாத நிலையில், பரீட்சார்த்த நிலையில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad