சீனாவை மகிழ்விக்க கைது : இந்தியாவை சமாளிக்க விடுதலை...!
சீனாவினை மகிழ்விக்க இந்திய மீனவர்களை கைதுசெய்வதும், இந்தியாவினைச் சமாளிக்க மீனவர்கள் விடுதலை செய்கின்ற நடவடிக்கையினையும் சிறிலங்கா அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் முன்னெடுப்பதாக வடமாகாண கடல்தொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட தலைவர் என்.எம்.ஆலம் குற்றம்சாட்டியுள்ளார்.
நாங்கள் பல்வேறு போராட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்த போதும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படவில்லை.
ஆனால் சீனத்தூதுவர் வடக்கிற்கு வந்து சென்ற பின்னர் கைது நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை