• Breaking News

     சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிர்வாகத்தெரிவு


    சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக்கல்வி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகத்தெரிவு நேற்று பிற்பகல் சுழிபுரம் மேற்கு இலவசக்கல்வி நிலையத்தில் இடம்பெற்றது.

    கடந்த 2019 ஆம் ஆண்டு புரட்டாதி சுழிபுரம் இலவசக்கல்வி நிலையத்தில் கல்வி கற்று இலங்கையின் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை தொடரும் மாணவர்கள் தமது சமூகத்தின் பாடசாலை மாணவர்களை உயர் கல்வியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில்  கலைமகள் இலவசக்கல்வி பல்கலைக்கழகமாணவர் ஒன்றியம்  உருவாக்கபட்டு இரண்டு வருட நிர்வாகக்காலம் முடிவடைந்தது.

    இந்நிலையில் புதிய நிர்வாகத்தெரிவு நேற்று இடம்பெற்றது. இதன்போது தலைவராக இ.தர்ஷன் (யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன்), உபதலைவராக சி.ராகவன் (யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன்), செயலாளராக ர.பிரியங்கா (யாழ் பல்கலைக்கழக மாணவி), உப செயலாளராக சௌ.கஜலன் (சபரகமுவ பல்கலை மாணவன்), பொருளாளராக அ.சுபாஸ்கரன் (கொழும்பு பல்கலைக்கழக மாணவன்), நிர்வாக உறுப்பினர்களாக ப.டிலக்சனா (பேராதனை பல்கலை மாணவி), து.சுதர்ஷன் (சபரகமுவா மாணவன்), த.பிரியதர்ஷினி (யாழ் பல்கலை மாணவி), சி.திலக்சன் (ஊவா வெல்லஸ்ஸ பல்கலை மாணவன்), சி.தர்மிகா (பேராதனை பல்கலை மாணவி), சி.பிரசாந் (மட்டகளப்பு விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக மாணவன்), கு.சுலக்சனா (மட்டகளப்பு பல்கலை மாணவி), போஷகர்களாக திரு அ.சிவானந்தன் (ஆசிரியர் - கலைமகள் இலவசக்கல்வி நிலைய உப தலைவர்), திரு.கி.சுபகரன் (ஆசிரியர் - கலைமகள் இலவசக்கல்வி நிலைய செயலாளர்) போன்றோர் தெரிவு செய்யப்பட்டனர்.

    இதன்போது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கலைமகள் இலவசக்கல்வி நிலைய நிர்வாகத்தினர் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad