• Breaking News

    மூங்கிலாறு சிறுமியின் மரணம்! தாய், தந்தை, சகோதரியை தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு!!!

     முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயதுச் சிறுமி யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் விசாரணைகளின் போது சிறுமியின் தந்தையார் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    இந்நிலையில் குறித்த சிறுமியின் தாய் தந்தை அவருடைய சகோதரி ஆகியோர் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

    இவர்கள் மூவரையும் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய காவல்துறையினர் இவர்களை 48 மணிநேரம் காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்தனர்.

    இந்நிலையில் விடயங்களை கேட்டறிந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா இவர்களை 48 மணிநேரம் காவல்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad