அமைச்சர் டக்ளஸின் வருகையால் விலகிச் சென்றது கஜேந்திரகுமார் எம்.பி அணி...!
இன்று யாழில் மீனவர்களின் போராட்டத்திற்கு வந்த டக்ளஸை கண்டதும் கஜேந்திரகுமார் அணி அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றுள்ளது.
யாழ். மாவட்ட மீனவர்களினால் இன்றையதினம் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினை நிறுத்த கோரி யாழ். மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் வீதிமறியல் போராட்டம் முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன், கஜேந்திரகுமார் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்த நிலையில்
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்ட வீதி மறியல், முடக்க போராட்டத்திற்கு வருகை தந்தபோது, டக்ளஸ் தேவானந்தாவின் வருகையை அவதானித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்விடத்தை விட்டு நழுவிச் சென்றனர்.
கருத்துகள் இல்லை